சங்கே முழங்கு!
நாலாம் சாதிக்காரனின் நாக்கை இழுத்துவைத்து அழுத்தமாய் சொரனை எழுதிய ஈரோட்டுக் கிழவனுக்கு எம்மினத் தலைவனுக்கு நன்றியுடன் …..

ஜெயேந்திரரின் அரசியல்

கொலை வழக்கு ஒன் றில் முதல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் (மாஜி) ஜெயேந்திர சரஸ்வதி – ஒரு அரசியல் புரோக்கர்; தேர்தல் நேரங் களில் சன்னமாகத் தன் வேலையைக் காட்டுவார்! கொடுக்கை நீட்டுவார்! எங்கே எப்படி முள்வைப்பது என்பதில் கில்லாடி. தொடக்கத்தில் நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும்படிக் கூறியவரும் இவரே! தன் கையாளாக சோ ராமசாமியை அனுப்பி ஆங் காங்கே விஷமதானங் களைச் செய்து கொண்டி ருப்பவர் இவர். ராஜபாளையத்தில் தொழில் அதிபர்களைச் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டவரும் இவர்தான். அண்மையில் தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். தே.மு.தி.க. தலைவரின் துணைவியாரையும் சந் தித்து இருக்கிறார். சமத் துவ மக்கள் கட்சித் தலை வரையும் சந்தித்து இருக் கிறார். இவ்வளவும் எதற் காகவாம்? நடக்கவிருக்கும் தேர் தலில் இவர்கள் எல்லாம் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என் பதற்காகத்தான் இத்தகைய முயற்சி. பா.ஜ.க. என்றால் பார திய ஜனதா என்று சொல் வதைவிட பார்ப்பன ஜனதா என்று சொல்வதுதானே பொருத்தமானதும் – மிகச் சரியானதாகவும் இருக்க முடியும். வெளி உலகத்தில் எப் படிப்பட்ட அபிப்ராயத்தை உருவாக்கி வைத்திருக் கின்றனர்? அவாள் பெரிய வாள் – இந்த அரசியல் விவ காரம் என்கிற சிற்றின்பத் தில் எல்லாம் ஈடுபடமாட் டார். சதா அவருடைய எண்ணமெல்லாம் ஈசனைப் பற்றிய பேரின்பமே! ஆத் மாவுக்கும், பரமாத்மாவுக் கும் இடையில் பாலங் கட்டுவதுதான் அவரின் வேலை என்று சமத்தாக அவரைப்பற்றி மக்கள் மத்தியிலே பிம்பம் வரைந்து வைத்துள்ளார்கள். ஆனாலும் உண்மை என் னவோ வேறாகத்தானிருக் கிறது. அதுவும் அவாள் ஆத்துப் பத்திரிகையான ஜூனியர் விகடனே (22.3.2009) ஜெயேந்திரரின் அரசியல் திருவிளை யாட்டை விவரிக்கும்போது நம்பாமல்தான் இருக்க முடி யுமா? காரணம், விகடனுக் கும், பெரியவாளுக் கும் அவ் வளவு அன்னியோன்னியம்! செத்துப்போன பிறகும் சிவலோக பதவியையும், வைகுந்த பதவியையும் தேடிக்கொண்டிருப்பவர்கள் இந்த அரசியல் பதவி விஷ யத்திலும் மூக்கை நுழைக் கிறார்கள் என்பதுதான் தமாஷ்! – மயிலாடன்

2 பதில்கள் to “ஜெயேந்திரரின் அரசியல்”

  1. பாரதிய ஜனதா பார்ப்பனீய ஜனதா என்பது தமிழகத்தில் நன்கு புரிந்து விட்டது.அதுதான் அந்தக்காலத்தில்
    “மிலேச்சர்கள்” என்று அவமானப் படுத்தப் பட்டு,
    திராவிடர்களால் ஒதுக்கப் படுத்தப்பட்ட மாதிரி இப்போது ஒதுக்கப்பட்டு விட்டது.
    ஆனால் வட்க்கே தான் இந்தப் பார்ப்பனீய சூழ்ச்சி இன்னும் புரியாமல் பார்ப்பனரல்லாதவர்கள் முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்காக இந்துத்துவா என்று இவர்களைக் கட்டி அழுது கொண்டுள்ளனர்.ஆர் .எஸ்.எஸ் சின் கையில் தான் அவர்கள் சிண்டு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் பின் அங்கும் ஒதுக்கித் தள்ளப் பட்டு விடுவார்கள்.


பின்னூட்டமொன்றை இடுக