சங்கே முழங்கு!
நாலாம் சாதிக்காரனின் நாக்கை இழுத்துவைத்து அழுத்தமாய் சொரனை எழுதிய ஈரோட்டுக் கிழவனுக்கு எம்மினத் தலைவனுக்கு நன்றியுடன் …..

Feb
08

நீண்ட நாட்களாக பெரியாரின் படம் கொண்ட வால்பேப்பர்களை இணையத்தில் தேடி தேடி அலுத்துவிட்டேன்.திராவிடர் கழகத்தின் இணையத்தில்கூட பழைய காலண்டர் வடிவத்தில் உள்ள படங்களைமட்டுமே காண முடிகிறது.எனவே என்னால் முடிந்த அளவுக்கு, படங்களை மேம்படுத்தும் என் அறிவிற்கு ஏற்ப அய்யாவின் படங்களை, அவரின் பொன்மொழிகளோடு
வால்பேப்பர்களாக தயாரித்து இதில் வெளியிடுகிறேன்.படம் வேண்டுவோர் படத்தின்மீது க்ளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.மிகுந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட தமிழர்கள் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி பெரியாரின் வால்பேப்பர் இணையத்தில் ஏராளமாக கிடைக்க வழிவகை செய்யுமாறு பனிவுடன் கோருகிறேன்.

படத்தின் மீது க்ளிக்குக.

Feb
08

images_authors_kasi-anandan3

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்
arivumathi_bb

பாவலர் அறிவுமதி


ஹைக்கூ

Dec
06
Oct
21

பெரியார் சாதித்ததை பார்க்க எசாலத்தான் அய் சொடுக்கவும்

Jul
03

மனித வாழ்வில் முக்கிய ஆதாரம் பணம்! பணம் இருந்தால் பிணமும் வாய் திறக்கும், பணம் பாதாளம் வரை பாயும் என்பது எல்லாம் பணத்தின் தன்மையை வெளிப்படுத்தும் பழமொழிகள். அந்தப் பணத்தினை சம்பாதிக்க மதத்தினைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இன்றளவும் எத்தனையோ கோவில்கள் கொள்ளைக்கூடாரங்களாக மாறி வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வரிசையில்….
வாடிப்பட்டியில்….
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்ற பெயரில் ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரை ஏசுவின் அரு மருந்து என்று காசுக்கு விற்று கூட்டத்தை கூட்டி வருமானத்தால் வளங்கொழித்து வரும் திருத்தலத்தின் முந்தைய நிலையைப்பற்றி பூர்வீகமாக வாழ்ந்து வருபவர்களை கேட்டால் வேடிக்கை-யாகச் சொல்வார்கள் இந்த இடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியில் மேற்கு பகுதியில் பொன்பெருமாள் கரடு என்றழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அருள்மிகு வல்லபகணபதி நகரில் கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்யும் நிலமாக இருந்து வந்தது.
மலையின் கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் வயல் காடுகளாகவும், வடக்கு பக்கம் கண்மாயாகவும் இருந்து வந்தன. காலப்போக்கில் கிழக்குப் பகுதியில் குடியிருப்புகளும் மேற்குப் பகுதியில் தனியார் தோட்டக்-கலை பண்ணைகளும் வந்தன. இதில் வடக்குப் பகுதியில் கண்மாய் அப்படியே இருந்து வருகிறது. ஆனால் தெற்குப் பகுதியில் 6 ஏக்கர் நிலத்தில் 6.6.1999-_ஆ-ம் ஆண்டு 1 ஏக்கர் அளவில் கட்டப்பட்டது. அன்னைஅவணி ஆலயம் இதை அப்போது பங்குத் தந்தையாக இருந்துவந்த விஜய் அமல்ராஜ் என்பவர் நன்கொடை வசூல் செய்து அனைத்து ஜாதி, மத இளைஞர்களை ஒன்று சேர்த்து கலைக்குழு அமைத்து மத வளர்ச்சிக்காக வேலைகள் செய்தார். அப்போது அவர்மீது பாலியல் சர்ச்சை எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாராலும் மறக்க முடியாது.
இந்த ஆலயம் அதன்பின் சிறிது சிறிதாக வளர்ந்து வந்தது. இதன் உள்ளே நடுப் பகுதியில் ஏசுநாதர் சிலையும் அதன் வலதுபுறத்தில் ஜன்னலுக்கு அருகே மாதா சிலையும் வைக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் 2001 செப்டம்பர் மாதம் 8-_ஆம் தேதி மாதா சிலையின் பாதத்திலிருந்து தண்ணீர் சிறிது சிறிதாக கசியத் தொடங்கியதாகவும் அது ஏசுவின் அருமருந்து என்றும் கூறினர். மறுநாளே இரவோடு இரவாக அந்த பகுதியை தோண்டி ஆழ்துளை அமைத்து அந்த தண்ணீரை மோட்டார் பம்பு செட் மூலமாக எடுத்து தொட்டி ஒன்றை வைத்து வருவோர் போவோருக்கு முதலில் இலவசமாக மாமருந்தாக கொடுத்து வந்தனர்.
அதில் வாடிப்பட்டியை சேர்ந்த ஜான் மில்லர் என்பவரின் தோல் நோய் குணமானதாகவும், மதுரை பீட்டர் என்பவரின் நெஞ்சு, முதுகிலிருந்த கட்டிகள் நீங்கியதாகவும், டென்சி அமலியின் காது கேட்கத் தொடங்கியதாகவும், வத்தலக்குண்டு வேதராணிக்கு கால்வலி, எரிச்சல் நீங்கியதாகவும் கூறி இது போன்ற புதுமைகள் நடந்து வருவதாக எழுதி வாங்கி சாட்சி-களாக ஆள்களை சேர்க்க தொடங்கினர்.
குழந்தைப் பாக்கியம் கிடைக்குமாம்!
அதன்பின் குழந்தைப் பாக்கியம், வேலை வாய்ப்பு, கடன் தொல்லை, நோய் நீங்குதல் போன்ற அதிசயங்கள் நாள்தோறும் நடப்பதாக திருச்சி, சென்னை, பாளை திருநெல்வேலி, நாகர்கோவில், இடுக்கி, மூணாறு, கோவை, கேரளா போன்ற இடங்களில் சர்ச் இருக்கும் இடங்களில் எல்லாம் பரப்பிடவே, அந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். உடனே அன்னை அவணி ஆலயம் என்பதை ஆரோக்கிய அன்னை திருத்தலமாக பெயர் மாற்றம் செய்து இலவச-மாக வழங்கி வந்த ஏசுவின் அருமருந்தை சிறிய சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து காசுக்காக விற்கத் துவங்கினர். அதோடு மட்டுமல்லாது இது சம்மந்-தமான உபபொருள்கள் படம், ஒலிநாடா என்று வரு-மானத்திற்கு வழி வகுக்கும் செயல்களில் தீவிரம் காட்டத் தொடங்கினர். இதனால் தற்போது வருமானத்தில் வாடிப்பட்டி திருத்தலம் வளங்கொழித்து வருகிறது.
இந்தியாவில் எத்தனையோ எண்ணில் அடங்காத கிராமக் கோவில்கள் முதல் பெரிய பெரிய ஆலயங்கள் வரை கட்டப்பட்டு வரலாற்றில் மக்கள் முதல் மன்னர்கள் வரை பெயர் சொல்லும் அளவில் இருந்து வருகின்றன. ஆனால் இவைகளில் எல்லாம் வேறுபடும் விதமாக குறுகிய காலத்தில் 10 ஆண்டுகள்கூட ஆகாத நிலையில் திடீர் என்று ஒரு திருத்தலம் வளர்ந்ததன் காரணம் என்ன? நவநாகரிகம் வளர்ந்து, அணுவைத் துளைத்து ஆராய்ச்சி செய்து, கணிப்பொறியை கண்டுபிடித்து சாதனைகள் செய்து, சந்திரனில் சென்று கால்பதித்து எண்ணில் அடங்காத அறிவியல் சாதனைகளை செய்து வரும் இந்த காலத்தில் இப்படியும் சில இடங்களில் தன் சுய லாப வருமானத்திற்காக மத வேத போதனைகள் மூலம் மக்களை ஏமாற்றி வருவது வேதனைக்குரிய-தாகும்.
ஏமாறுபவன் இருக்கும் வரை
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இறப்பது என்பதும் பிறப்பது என்-பதும் யாருடைய கையிலும் இல்லை. இயற்கையாக தோன்றிய ஒவ்வொரு உயிரும் என்றாவது ஒருநாள் மறையும், அழியும் என்பது மறுக்க முடியாது. ஆனால் இயற்கை மட்டும் என்றும் அழிவது இல்லை. இதில் மனிதப் பிறப்பு என்பது தன் ஆறாவது அறிவு பகுத்-தாராயும் அறிவு பகுத்தறிவு மூலம் சிந்தனை செய்து ஏன்? எதற்கு? எப்படி? என்று வினாக்கள் தொடுத்து, அதற்கு விடைகள் கண்டு சாதனைகளை செய்து வருவ-தற்-காகத்தான் என்பதை அனைவரும் அறிய வேண்-டும். ஆலயத்தின் பெயரோ அன்னை அவணி ஆலயம் ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று பெயரை வைத்துக் கொண்டு மத்தியில் உள்ள பீடத்தில் மட்டும் ஏன்? ஏசு சிலை அமைக்க வேண்டும். ஏசு-வின் அருமருந்து ஜீவநீருற்று ஏசு சிலையின் காலடி-யில் இருந்து வராமல் மாதா சிலையின் காலடியிலிருந்து வந்ததன் காரணம் என்ன? ஜீவ நீருற்று என்றால் 24 மணி நேரமும் வந்தபடி இருக்க வேண்டும். ஆனால் அதில் ஆழ்துளை கிணறு அமைத்து அதை தேவைக்கு ஏற்றாற் போல தேக்கி வைத்து பயன்படுத்துவதன் காரணம் என்ன? இந்த அருமருந்தை பயன்படுத்தியவர்கள் இன்று வரை எந்த மருத்துவரையும் போய் பார்க்கவில்லையா? வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் தான் இதற்கு சக்தி உண்டா? மற்ற நாள்களில் ஈ, காக்கா, எறும்புகூட இந்த ஆலயத்-திற்கு வருவதில்லை. அதன் காரணம் என்ன? இந்த அருமருந்து மூலம் உடலில் பூசினால், குடித்தால் நோய் குணமாகும் என்பதோடு குழந்தை பாக்கியம் உண்-டாகும், வேலை வாய்ப்பு, கடன் தொல்லை நீங்கும் என்-பது எல்லாம் எப்படி சாத்தியமாகும்?
மதம் ஒரு அபின் என்று சொன்னது இதனால்-தானோ!

மா. பவுன்ராசா
செய்தியாளர், மதுரை

Apr
24

இந்தியத் துணைக் கண்டத்துக்கு பிரதமர்களுக்குப் பஞ்சம் போலும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் இந்தியாவுக்குப் பிரதமராக ஜெயலலிதாவுக்கு முழுத் தகுதியும் உண்டு; பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று முகமன் கூறும் அளவுக்குத் தங்களைத் தாழ்த்திக் கொண்டு விட்டார்களே.
திராவிடப் பாரம்பரியம் பேசுபவர் – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ; பெரியார் கொள்கை பேசுபவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு-
எந்த வகையில் ஜெயலலிதா பொருத்தமானவர் என்று விளக்கியிருக்கலாம்.
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் (அமைச்சருக்குரிய தகுதி உண்டு) நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் வெடித்துக் கிளம்பினாலும், மக்கள் அவதிப்பட்டாலும் அவற்றைப்பற்றி யெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் அக்கறை காட் டாமல் மலைவாசத்தலத்தில் (கொடைநாடு) பங்களாவில் மூன்று மாதம் ஓய்வு எடுத்துக்கொள்கிறார் என்றால், அதைப்பற்றி என்ன நினைப்பது? மந்திரி மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்கும் பழைய காலத்துப் பாணியா? அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று சொல்கிறவர்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றனரே என்று நினைக்கும்பொழுது, அவர் களைப்பற்றிதான் என்ன நினைப்பது?
மக்களைச் சந்திப்பதே தன் தகுதிக்குக் குறைவு என்கிற பழைய காலத்து மகாராணி மனோபாவத்தில் உள்ளவர், 110 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டுக்கான பிரதமர் என்று எப்படித்தான் நினைக்கவும் முடிகிறது?
அண்ணா பெயரில் கட்சி, பெரியார் பெயரை முத்திரை யாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிருந்தாலும் அந்தத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில்கூட பங்களாவை விட்டு வெளியில் வந்து அத்தலைவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்கிற அடிப்படை உணர்வும், இங்கிதமும், மரியாதையும் கூடத் தெரியாத ஒருவரை பிரதமருக்கான பதவிக்குச் சிபாரிசு செய்வது எவ்வளவு பொறுப்பற்ற தன்மையாகும்!
தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்கக் கூடியவர் – அதுவும் ஹெலிகாப்டரில் பறந்து செல்லக் கூடியவராக உள்ள ஒருவர் ஜனநாயகம் என்ற சொல்லைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவர்.
சாதாரண மக்களை விட்டுத் தள்ளுங்கள்; கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பதற்கே எவ்வளவு அலைக் கழிப்பு! இன்றைக்குக்கூட்டு சேர்ந்துள்ள தலைவர்களும் (இப்பொழுது வேண்டுமானால் வெளிப்படையாகச் சொல்லக்கூடிய நிலையில் இல்லாமல் இருக்கலாம்) பல நேரங்களில் இந்த அவமானத்தைச் சுமந்தவர்கள் ஆயிற்றே!
ஜெயலலிதாவை பிரதமருக்குப் பொருத்தமானவர் என்று கூறும் வைகோ அவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த் தையில் பட்ட அவமானம் கொஞ்சநஞ்சமா? எதையும் சொல்லும் மன நிலையில் நான் இல்லை என்று புலம்பும் நிலைக்கு அவர் ஆளாகவில்லையா? அப்படி ஆளாகும் நிலைக்கு ஆட்படுத்தியவர்தானே ஜெயலலிதா!
அவர் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்; ஒரு பொதுச்செயலாளர் அவரின் கட்சி அலுவலகத்துக்குச் செல்வது என்பது அடிப்படைக் கடமை.
ஆனால், இங்கு என்ன நடக்கிறது? பொதுச்செயலாளர் ஜெயலலிதா கட்சி அலுவலகத்துக்கு வருகிறார்! வருகிறார்!! பராக்! பராக்!! என்று வேட்டு சத்தத்துடன், மேளதாளத் துடன் வாழை மரம் – மாவிலை தோரணங்களுடன் வரவேற்புச் சுவரொட்டிகள் சகிதமாக நடக்கிறது என்றால் இதைவிட பூர்ஷ்வாதனமும், அகங்காரமும் வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?
பதவியில் இல்லாத காலத்திலேயே – இவ்வளவு படாடோபமும், பராக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் நலனில் அக்கறையில்லாத, எதிர்க்கட்சிகளை மதிக்காத, பத்திரிகைக்காரர்களை மதிக்காத முதல்வரை (ஜெயல லிதாவை) ஆட்சியில் நீடிக்கவிட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சியே முடமாகிப் போய்விடும். (குமுதம் ரிப்போர்ட்டர், 10.2.2005) என்று பேட்டி கொடுத்தவர் யார் தெரியுமா?
ஜெயலலிதாவைப் பிரதமராகப் பார்க்க ஆசைப்படும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசுதான்.
சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரி என்று ஜெயல லிதாவை படம் பிடித்த வைகோதான், பிரதமராவதற்கான தகுதி உடையவர் என்று கூறுகிறார்.
இந்தியாவின் பிரமதராகும் தகுதி சம்பல் பள்ளத்தாக்குக் கொலைகாரராகத்தான் இருக்கவேண்டும் போலும்! ஒரு மாநிலத்தின் வளர்ச்சியையே முடக்குபவர்தான் இந்தியா வின் பிரதமராகவேண்டும் போலும்! நான்கு இடங்களுக் காக மனிதர்கள் இப்படி தறிகெட்டுப் போகவேண்டுமா?

Apr
23
Apr
11

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் இச்சூழலில்,அக்கால காங்கிரஸை எதித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது என்ன? எப்படி? என்பதை இங்கே கேளுங்கள். காங்கிரஸ் என்பது இன்றுமட்டுமல்ல,என்றைக்கும் அழுக்கேறியதுதான் என்பதை அண்ணா கூறுகிறார்

இது அண்ணாபேரவை வெளியீடு

Mar
29

கொலை வழக்கு ஒன் றில் முதல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் (மாஜி) ஜெயேந்திர சரஸ்வதி – ஒரு அரசியல் புரோக்கர்; தேர்தல் நேரங் களில் சன்னமாகத் தன் வேலையைக் காட்டுவார்! கொடுக்கை நீட்டுவார்! எங்கே எப்படி முள்வைப்பது என்பதில் கில்லாடி. தொடக்கத்தில் நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும்படிக் கூறியவரும் இவரே! தன் கையாளாக சோ ராமசாமியை அனுப்பி ஆங் காங்கே விஷமதானங் களைச் செய்து கொண்டி ருப்பவர் இவர். ராஜபாளையத்தில் தொழில் அதிபர்களைச் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டவரும் இவர்தான். அண்மையில் தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். தே.மு.தி.க. தலைவரின் துணைவியாரையும் சந் தித்து இருக்கிறார். சமத் துவ மக்கள் கட்சித் தலை வரையும் சந்தித்து இருக் கிறார். இவ்வளவும் எதற் காகவாம்? நடக்கவிருக்கும் தேர் தலில் இவர்கள் எல்லாம் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என் பதற்காகத்தான் இத்தகைய முயற்சி. பா.ஜ.க. என்றால் பார திய ஜனதா என்று சொல் வதைவிட பார்ப்பன ஜனதா என்று சொல்வதுதானே பொருத்தமானதும் – மிகச் சரியானதாகவும் இருக்க முடியும். வெளி உலகத்தில் எப் படிப்பட்ட அபிப்ராயத்தை உருவாக்கி வைத்திருக் கின்றனர்? அவாள் பெரிய வாள் – இந்த அரசியல் விவ காரம் என்கிற சிற்றின்பத் தில் எல்லாம் ஈடுபடமாட் டார். சதா அவருடைய எண்ணமெல்லாம் ஈசனைப் பற்றிய பேரின்பமே! ஆத் மாவுக்கும், பரமாத்மாவுக் கும் இடையில் பாலங் கட்டுவதுதான் அவரின் வேலை என்று சமத்தாக அவரைப்பற்றி மக்கள் மத்தியிலே பிம்பம் வரைந்து வைத்துள்ளார்கள். ஆனாலும் உண்மை என் னவோ வேறாகத்தானிருக் கிறது. அதுவும் அவாள் ஆத்துப் பத்திரிகையான ஜூனியர் விகடனே (22.3.2009) ஜெயேந்திரரின் அரசியல் திருவிளை யாட்டை விவரிக்கும்போது நம்பாமல்தான் இருக்க முடி யுமா? காரணம், விகடனுக் கும், பெரியவாளுக் கும் அவ் வளவு அன்னியோன்னியம்! செத்துப்போன பிறகும் சிவலோக பதவியையும், வைகுந்த பதவியையும் தேடிக்கொண்டிருப்பவர்கள் இந்த அரசியல் பதவி விஷ யத்திலும் மூக்கை நுழைக் கிறார்கள் என்பதுதான் தமாஷ்! – மயிலாடன்

Mar
11

pmk-oath3

‘வாழ்க ஜனநாயகம்!

இனமானம் என்பது
கோவணம் மாதிரி…

பதவியோ அழகிய
அலங்காரத் துண்டு மாதிரி…

இன்று உறுதி ஏற்கிறோம்,
கோவணத்தை இழந்தாவது
அந்த அலங்காரத் துண்டை
அடைந்தே தீருவோம் என்று!

தமிழ் கலாச்சாரத்தை ஒழித்தாவது
தேர்தல் கலாச்சாரத்தை
வளர்ப்போம் என்று!!’

நன்றி:என்வழி

Mar
09

nationalflag2

kaanthal

senpakam

siruththai

நன்றி:ஈழதேசம்

Mar
08

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி – மக்களின் மனதை கலங்கடித்துவரும் பாடல்

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!

நன்றி:tamiltube