சங்கே முழங்கு!
நாலாம் சாதிக்காரனின் நாக்கை இழுத்துவைத்து அழுத்தமாய் சொரனை எழுதிய ஈரோட்டுக் கிழவனுக்கு எம்மினத் தலைவனுக்கு நன்றியுடன் …..

Posts Tagged ‘கவிதை’

அறிவுமதி கவிதை

மார்ச் 7, 2009

பிழைக்கும் வழி
மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!
-அறிவுமதி-

குதித்துக் கரையேறுகிறோம்

பெப்ரவரி 24, 2009

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!
பாவலர் அறிவுமதி

பட்ட வலிகளே பாடங்கள்

பெப்ரவரி 22, 2009

முள்ளின் கீறல் வலி என்று
முனகுவதில்லை இசைத்தட்டு
பள்ளம் பறித்த பூமியில் தான்
புத்துயிர் தோன்றும் முளைவிட்டு
பட்ட வலிகளே பாடங்கள்
பழித்தவர் சொற்கள் வேதங்கள்
விட்டிடு காயம் ஆறட்டும்
வாழ்வின் போக்கே மாறட்டும்.
-மரபின் மைந்தன்..முத்தையா

கவிதைகள்

பெப்ரவரி 8, 2009

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்

பாவலர் அறிவுமதி

ஹைக்கூ

அறிவுக்கவிதை-4

ஜனவரி 10, 2009

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு

அறிவுக்கவிதை-2

ஜனவரி 7, 2009

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம். -

அறிவுக்கவிதை-1

ஜனவரி 3, 2009

இழந்த  உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று

வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது
-பாவலர் அறிவுமதி-